/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி அருகே சேதமடைந்த நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி: மக்கள் அச்சம்

ADDED : செப் 21, 2024 02:53 AM
கரூர்: க.பரமத்தி அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்-துள்ளது. மேல் நிலை தொட்டியை பராமரிக்க வேண்டும் அல்-லது அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்., யூனியன் தும்பிவாடியில், 20 ஆண்டுகளுக்கு முன், 10 லட்ச ரூபாய் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டிக்கு, காவிரி நீர் குழாய் மூலம், ஐந்து கிராம பஞ்சாயத்துக்களுக்கு சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லாததால் தற்போது, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. முட்புத-ருக்குள்
மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.குறிப்பாக, மேல் நிலை குடிநீர் தொட்டியில், பராமரிப்பு பணிக்-காக கட்டப்பட்ட படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளது. கான்-கிரீட்
கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு, படிக் கட்டுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால், அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.எனவே, தும்பிவாடி பகுதியில் உள்ள, மேல் நிலை குடிநீர் தொட்-டியை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அப்புறப்படுத்த க.பரமத்தி
பஞ்., யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.