/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள்; உடனடியாக சீரமைப்பது அவசியம்
/
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள்; உடனடியாக சீரமைப்பது அவசியம்
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள்; உடனடியாக சீரமைப்பது அவசியம்
சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள்; உடனடியாக சீரமைப்பது அவசியம்
ADDED : செப் 25, 2024 07:03 AM
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில், பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் உடைந்துள்ளன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி, பழைய கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படும் போது, அதை சரி செய்ய வசதியாக வட்ட வடிவில் மேல் பகுதிகளில், துவாரம் விடப்பட்டு, சிமென்ட் மூடிகள் போடப்பட்டுள்ளன. பல முக்கிய சாலைகளில், பாதாள சாக்கடை மேல் பகுதியில் போடப்பட்டுள்ள, சிமென்ட் மூடிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதனால், வாகனங்களின் டயர்கள் சேதமடைகிறது. இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்கிறவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
பாதாள சாக்கடை சிமென்ட் மூடி, சேதமடைந்துள்ளது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும், அதை உடனடியாக சரி செய்யாமல், கரூர் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், வெங்கமேடு கருப்பண்ணன் கோவில் சாலை பாதாள சாக்கடை மூடி சேதமடைந்தது. இதை சரிசெய்யாமல், அந்த தொட்டி சுற்றி பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், தெரியாமல் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பருவமழை துவங்கும் முன், சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை உடனடியாக சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.