தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டார்ஜிலிங் ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை

டார்ஜிலிங் ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை

டார்ஜிலிங் ஆப்பிள் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை


ADDED : ஆக 23, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:வட மாநிலங்களில் இருந்து, கரூருக்கு வரத்தாகியுள்ள, ஒரு கிலோ டார்ஜிலிங் ஆப்பிள் அதிகபட்சமாக, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு காலத்தில் பணக்காரர்களின் பழம் என அழைக்கப்பட்ட ஆப்பிள், தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆக., செப்., அக்., மாதங்களில் ஆப்பிள் பழத்துக்கு சீசன் காலமாகும். தமிழகத்தில் மலைப்பகுதியில் மட்டும் குறைந்தளவே சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தேவைக்கு, வட மாநிலங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.

சீசன் இல்லாத காலங்களில் ஒரு கிலோ ஆப்பிள், 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வட மாநிலங்களில் கடந்த, 10 ஆண்டுகளாக ஆப்பிள் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக, தமிழகத்துக்கு ஆப்பிள் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மத்திய பிரதேசம், இமாச்சால பிரதேசம் பகுதிகளில் இருந்து டார்ஜிலிங் ஆப்பிள் வரத்து குவிய தொடங்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன், பெரிய கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள், தற்போது சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக, 120 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக, 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வைட்டமின், புரதச்சத்துகள் அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை, பலரும் வாங்கி செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us