/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகள், மருமகன் மாயம் மாமனார் போலீசில் புகார்
/
மகள், மருமகன் மாயம் மாமனார் போலீசில் புகார்
ADDED : செப் 23, 2024 04:40 AM
கரூர்: கரூர் அருகே, மகள், மருமகன், பேரக்குழந்தைகளை காண-வில்லை என, முதியவர் போலீசில் புகாரளித்துள்ளார்.
கரூர் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், மருத்துவர் நகரை சேர்ந்-தவர் ராஜா, 40; இவரது மனைவி சித்ரா, 36; மகன்கள் அஸ்விந்த், 11; ஈஸ்வர், 6; ஆகியோர் கடந்த, 19ல் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றனர். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த, ஈரோடு மாவட்டம், சிவகி-ரியை சேர்ந்த ராஜாவின் மாமனார் சதாசிவம், 60, அளித்த புகார்-படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.* புலியூர் கிழக்கு கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜாராம் மகள் ஸ்ரீநிதி, 19; நாமக்கல் மாவட்டம், திருச்செங்-கோட்டில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்ற, ஸ்ரீநிதியை காணவில்லை. இதுகுறித்து, ஸ்ரீநிதியின் தாய் பிரேமலதா, 42, கொடுத்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
* வாங்கல் சின்னகாளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலன், 53; மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இந்நிலையில் கடந்த, 10ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலன், வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் பாலன் செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த பாலனின் மனைவி சீத்-தாம்மாள், 50, அளித்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரிக்-கின்றனர்.