ADDED : பிப் 23, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை; குளித்தலை அடுத்த தோகைமலை, தெற்கு சேனியர் தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜன், 57; ஓட்டல் மாஸ்டர்.
இவரது மகள் சித்ரா, 21, குளித்தலை அரசு கலை கல்லுாரியில், எம்.எஸ்சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 18ல் இரவு, பெற்றோர் மற்றும் சித்ரா ஆகியோர் துாங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது, சித்ராவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தோகைமலை போலீசில், சுந்தரராஜன் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.