ADDED : டிச 25, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்: தந்தை புகார்
குளித்தலை, டிச. 25-
குளித்தலை அடுத்த சிந்தலவாடி பஞ்., பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன், 47; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரவீனா, 15; புனவாசிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, ஜெயபாலன் அளித்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

