ADDED : ஜன 03, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்; தந்தை புகார்
குளித்தலை, ஜன. 3-
குளித்தலை அடுத்த, சேங்கல் பஞ்., மேலடை கிராமத்தை சேர்ந்தவர், 46 வயது தொழிலாளியின், 17 வயது மகள் அரசு கல்லுாரில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம், 31 இரவு, 10:30 மணியளவில் தாயாரிடம் பாத்ரூம் சென்று வருவதாக கூறியவர், அதன் பின் வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.