ADDED : மே 17, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, இளம்பெண்ணை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சண்முகம் தையல் தொழிலாளி. இவரது, 18 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். பின் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை சண்முகம், போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.