ADDED : ஜூன் 13, 2026 03:36 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கடவூர் யூனியன் வீரகவுண்டன்பட்டியை சேர்ந்த வேல்முருகன்,
49, விவசாயி. இவரது மகள் ரம்யா, 20, சென்னையில் மருந்தாளுனராக
மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
விடுமுறைக்காக கடந்த, 10ம் தேதி
ஊருக்கு வந்தவர் மதியம் 2:00 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, வேல்முருகன் கொடுத்த புகாரின்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
