ADDED : செப் 26, 2026 07:17 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த நங்கவரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 59.
நங்கவரம் டவுன் பஞ்., ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹர்ஷினி, 20, பி.காம்., சி.ஏ., படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில்
கடந்த, 23 காலை 10:30 மணியளவில் வீட்டிலிருந்து தான் படித்த,
திருச்சி தனியார் மகளிர் கல்லுாரியில் சான்றிதழ் வாங்குவதற்காக
சென்றார். பின்னர் வெகு நேரமாகி வீட்டுக்கு வரவில்லை.பல இடங்களில்
தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை
காணவில்லை என, ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்படி, நங்கவரம்
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
