தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : அக் 09, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 52. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் ரஞ்சனா, 19, தரகம்பட்டி அருகே தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 6ம் தேதி வழக்கம் போல், ஊரில் இருந்து பஸ்சில் கல்லுாரி சென்றவர், பின்னர் மாலையில் வீட்டுக்கு வரவில்லை. சக மாணவியரிடம் விசாரித்த போது, வளையப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அவரது தாத்தா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் அவர் தாத்தா வீட்டிற்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தந்தை கோவிந்த

ராஜ் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us