ADDED : ஜூலை 12, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, :குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவரின், 16 வயது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளவில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் பள்ளிக்கு வராததால், அவரது வகுப்பறை ஆசிரியர் போன் மூலம் தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.
பள்ளி சென்ற நண்பர்கள், தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை காணவில்லை என தாய் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் தேடி வருகின்றனர்.