ADDED : பிப் 23, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை;குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., அய்யலுார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, 38; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் கீதா, 18, அய்யர்மலை அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார்.
கடந்த, 19 காலை, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என, தாய் விஜயா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

