ADDED : மார் 29, 2026 02:51 AM
அ நிறம் | அளவு
குளித்தலை;குளித்தலை அடுத்த தொண்டமாங்கிணம் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்மாள், 43, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா, அரசு கலைக்கல்லுாரியில், பி.எஸ்.சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் வழக்கம் போல், கல்லுாரிக்கு சென்றவர், பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மகளை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
