ADDED : ஏப் 12, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராம திலகம், 48, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சஜிதா, 24. கடந்த 6ம் தேதி காலை 10:00 மணியளவில் ராமதிலகம் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்தார்.
அப்போது சஜிதாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தாய் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
