ADDED : ஏப் 23, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை
அடுத்த லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன்
புஷ்பராணி, தம்பதியரின் மகள் நித்திய லட்சுமி, 20. இவர் அரசு கலைக்
கல்லுாரியில் பி.எஸ்.சி., இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் பேசி வருவதை பெற்றோர் கண்டித்தனர்.
இந்நிலையில்
கடந்த, 20ல் கல்லுாரியில் தேர்வு எழுதி வருவதாக கூறி விட்டு
சென்றவர், பின்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும்
விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை
என தாய் புஷ்பராணி கொடுத்த புகாரின்படி, லாலாபேட்டை போலீசார்
வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
