ADDED : மே 03, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
குளித்தலை :குளித்தலை அடுத்த திருக்காம்புலியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாலதி, 45, விவசாய கூலி தொழிலாளி.இவரது மகள் சித்ரா, 21, கடந்த ஏப்., 30 காலை 9:00 மணியளவில் கரூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும் விசாரித்தும், வேலைக்கு சென்ற கம்பெனியில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகாரின்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
