ADDED : அக் 03, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
கரூர்
அரிக்காரன்பாளையத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவரது மனைவி
சினேகா, 29; இவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
நடந்தது. ஒரு பெண்
குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவருடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதே பகுதியியில் உள்ள தாய்
மரகதம் வீட்டில், சினேகா வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 30ல்
வீட்டில் இருந்து சென்ற சினேகா, வீடு திரும்பவில்லை. உறவினர்களின்
வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதுகுறித்து, தாய் மரகதம்
போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
