ADDED : ஏப் 19, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
குளித்தலை குளித்தலை அடுத்த பாதிரிப்பட்டி பஞ்., குச்சி பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 49, விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் சாந்தி, 21, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் மருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
