ADDED : ஆக 26, 2026 05:05 AM
குளித்தலை; குளித்தலை அடுத்த தோகைமலை சத்ரதெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 42; இவரது மகள் ரோஷினி, 17. வையப்பம்பட்டியில் உள்ள தனியார் கலை கல்லுாரியில், பி.காம்., - சி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்-தினம் இரவு, 8:30 மணிக்கு, கடைக்கு சென்றுவரு-வதாக கூறிவிட்டு சென்ற ரோஷினி, மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர், தோழிகளிடம் விசா-ரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என தாய் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்-றனர்.
* மாவத்துார் பஞ்., தாசிரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, 41; விவசாய கூலித்தொழி-லாளி. இவரது மகள் தரணியா, 19. கரூர் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த, 23 இரவு துாங்க சென்ற தாரணி, அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரை காணவில்லை. ராமசாமி அளித்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்-றனர்.
