/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்
/
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்
ரங்கநாதர் சுவாமி கோவிலில் 4ம் நாள் பகல் பத்து உற்சவம்
ADDED : டிச 24, 2025 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவத்தின், 4ம் நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் வலம் வந்தார். தொடர்ந்து வேத மந்திரம், மந்திர புஷ்பம், மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும், 29ல், மோகினியார் அலங்காரம், நாச்சியார் திருக்கோலம் நடக்கிறது. 30ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.