/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு பயிற்சியாளர் சேர்க்கை விண்ணப்பிக்க கால அவகாசம்
/
கூட்டுறவு பயிற்சியாளர் சேர்க்கை விண்ணப்பிக்க கால அவகாசம்
கூட்டுறவு பயிற்சியாளர் சேர்க்கை விண்ணப்பிக்க கால அவகாசம்
கூட்டுறவு பயிற்சியாளர் சேர்க்கை விண்ணப்பிக்க கால அவகாசம்
ADDED : ஜூன் 28, 2025 04:18 AM
கரூர்: கரூர் கூட்டுறவு துணை பயிற்சி மையத்தில், பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூலை, 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின், துணை பயிற்சி நிலையமான கரூரில், 2025-26ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் வரும் ஜூலை, 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி ஓராண்டு காலமாகும். இரண்டு பருவ முறைகள் கொண்டது.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அல்லது எஸ்.எஸ். எல்.சி., வகுப்புடன் கூடிய பட்டயப்படிப்பு அல்லது ஏதேனும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 1.7.2025 அன்று குறைந்தப்பட்சமாக, 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை. அதிகாரபூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம், 100 ரூபாயை இணைய வழி மூலம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கரூர் துணை பயிற்சி நிலையம், 145, ஜவஹர் பஜார், கரூர், 639001 என்ற முகவரியிலும், 0431-2715748, 99946-47631 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.