/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டை ஒப்படைக்க முடிவு
/
அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டை ஒப்படைக்க முடிவு
அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டை ஒப்படைக்க முடிவு
அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டை ஒப்படைக்க முடிவு
ADDED : ஏப் 21, 2024 02:11 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த, மருதுார் டவுன் பஞ்., விஸ்வநாதபுரம் சுப்பன் களம் கிராம
மக்கள், அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, கலெக்டரிடம்
ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. மேலும்,எம்.பி.,
தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். இதுதவிர, 'எங்களை கருணை கொலை
செய்யுங்கள்' என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தும், எந்த
விதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.
தேர்தல்
முடிந்தும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்,
கிராம மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை, கலெக்டரிடம் ஒப்படைப்பு
செய்வதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறியதாவது:
கிராமத்தில்
அடிப்படை வசதிகள் செய்து தர, பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்ததும்,
பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும்
எடுக்கவில்லை. இந்நிலையில் தேர்தலையும் புறக்கணிப்பு செய்தும்
நடவடிக்கை இல்லாததால், அனைத்து குடும்ப அட்டைகளையும் கலெக்டரிடம்
ஒப்படைக்க உள்ளோம்.இவ்வாறு கூறினார்.

