/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முடிவு ரத்து
/
பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முடிவு ரத்து
பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முடிவு ரத்து
பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முடிவு ரத்து
ADDED : ஜன 13, 2025 03:10 AM
கரூர்: கரூர் யூனியன், நெரூர் தென்பாகம் பஞ்சாயத்துக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் அருகே, டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகி-றது. இங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால், இந்த டாஸ்மாக் கடையை, நெரூர் வடபாகம் பஞ்சாயத்துக்குட்பட்ட பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகே இடமாற்றம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், 'டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யப்பட உள்ள இடம், கரூரிலிருந்து, நெரூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருவதால், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்-படும். எனவே, புதிதாகவோ அல்லது ஏற்கனவே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது' என, கரூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில், பா.ஜ., கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில் மனு அளித்தனர். அதை தொடர்ந்து, கடந்த, 5ல் அப்பகுதியில் திட்ட நிகழ்ச்சிக்கு வந்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் கரூர் மாவட்ட மேலாளர் அன்னம்மாள், 'நெரூர் வடபாகம் பஞ்சாயத்-துக்குட்பட்ட பார்க் நகர் பஸ் ஸ்டாப் அருகே, டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இதனால், அங்கு டாஸ்மாக் அமைக்கும் நடவ-டிக்கை கைவிடப்பட்டது' என தெரிவித்துள்ளார்.