தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குறைந்து வரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

குறைந்து வரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

குறைந்து வரும் நாட்டுக்கோழி வளர்ப்பு


ADDED : ஜூன் 22, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:க.பரமத்தி ஒன்றியத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

க.பரமத்தி ஒன்றியத்தில், 30 பஞ்.,களில் விவசாயம், கால்நடை வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது, போதிய மழை இல்லாததால் தானியம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. கிராமங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டனர். இதனுடன் நாட்டுக்கோழி வளர்ப்பை விவசாயிகள் இணை தொழிலாக செய்தனர். கிராம பகுதியில் நாட்டுக்கோழி அதிகளவில் வளர்க்கப்பட்டதோடு, விற்பனையும் அமோகமாக நடந்து வந்தது. தற்போது க.பரமத்தியில் போதிய மழை இல்லாததால் தானியங்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிடுவதில்லை. நவ தானியங்கள் விலை ஏற்றம், பிராய்லர் கோழிகளின் ஆதிக்கம் போன்றவைகளால் நாட்டுக்கோழி வளர்ப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us