தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிணற்றில் தவறி விழுந்த மான், மயில் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான், மயில் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான், மயில் மீட்பு


ADDED : அக் 02, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:தளவாபாளையம் அருகே நன்னியூர் புதுார் பகுதியை சேர்ந்தவர் அகிலன், 45, விவசாயி. இவருடைய தோட்டத்தில், 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. நேற்று அந்த வழியாக ஓடிச் சென்ற, புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

பின்னர் புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள், கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிய மானை, கயிற்றால் வாய் மற்றும் கண்களை கட்டி, கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். பின்னர் வனத்துறை ஊழியர்களிடம், புள்ளி மானை ஒப்படைத்தனர்.

* நொய்யல் அருகே குறுக்குச்சாலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் என்பவரின் கிணற்றில் மயில் விழுந்தது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை மீட்டனர். பின், அருகாமையில் உள்ள வனப்பகுதியில்

விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us