/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா
/
பசுபதீஸ்வரர் கோவிலில் தெய்வ திருமண விழா
ADDED : ஆக 12, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், ஸ்ரீமகா அபிஷேக குழு சார்பில், 26வது தெய்வ திருமண விழா, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 1ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.கடந்த, 9ல் தேவார இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, பரத நாட்டிய நிகழ்ச்சி, முளைப்பாரி மற்றும் சீர் தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிேஷகம், 8:00 மணிக்கு மங்கள இசை, காலை, 10:45 மணிக்கு தெய்வ திருமண விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.