/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே மருத்துவ நகரில் தார்ச்சாலை அமைக்க தாமதம்: வாகன ஓட்டிகள் அவதி
/
கரூர் அருகே மருத்துவ நகரில் தார்ச்சாலை அமைக்க தாமதம்: வாகன ஓட்டிகள் அவதி
கரூர் அருகே மருத்துவ நகரில் தார்ச்சாலை அமைக்க தாமதம்: வாகன ஓட்டிகள் அவதி
கரூர் அருகே மருத்துவ நகரில் தார்ச்சாலை அமைக்க தாமதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 01, 2024 12:23 PM
கரூர்: கரூர் அருகே சிமென்ட் கலவை போட்டு பல நாட்கள் ஆகியும், தார்ச்சாலை அமைக் கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் பரவியுள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, மருத்துவ நகரில், 500 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அரசு தொடக்கப்பள்ளி
உள்ளது. ஆனால், அந்த பகுதியில், பல ஆண்டுகளாக மண் சாலை இருந்தது. இதனால், தார்ச் சாலை அமைக்க கோரி அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து மருத்துவ நகரில் சில மாதங்களுக்கு முன், புதிதாக தார்ச்சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக் கற்கள் போடப்பட்டன. ஆனால், உரிய நேரத்தில் காமதேனு நகரில் தார்ச் சாலை அமைக்கவில்லை.
இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழை காரணமாக, சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் மருத்துவ நகரில் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதும், விபத்துக்குள்ளாவதும் தொடர்கிறது. ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து நிர்வாகம், மருத்துவ நகர் பகுதியில், சிமென்ட் கலவை போடப்பட்ட இடங்களில், உடனடியாக தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.