தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/தார்ச்சாலை அமைக்க தாமதம் விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்

தார்ச்சாலை அமைக்க தாமதம் விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்

தார்ச்சாலை அமைக்க தாமதம் விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்


ADDED : பிப் 07, 2026 09:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 09:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, சிமென்ட் கலவை போட்டு பல நாட்களாகியும், தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது.

கரூர் அருகே, பெரிய குளத்துப்பாளையம்-மூர்த்திப்பாளையம் சாலையில் சில நாட் களுக்கு முன், புதிதாக தார்ச்சாலை அமைக்க சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால், உரிய நேரத்தில் சாலை அமைக்கவில்லை.

இந்நிலையில், கரூர் நகர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் நிலையில், சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து விட்டதால், ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால், அதன் வழியாக பொது மக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, டூவீலர் களின் டயர்கள், அடிக்கடி பஞ்சராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கரூர் பெரியகுளத்துப்பாளையம்- மூர்த்திப்பாளையம் சாலையில் உடனடியாக, தார்ச் சாலை அமைக்க நடவடிக் கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us