தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் விட வலியுறுத்தல்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் விட வலியுறுத்தல்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் விட வலியுறுத்தல்


ADDED : மே 25, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், :காணியாளம்பட்டியில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வழித்தடத்தில், கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டியில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தின், பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து வருகின்றனர்.

கரூர், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும் பஸ்கள், மாணவ, மாணவியருக்கு போதுமானதாக இல்லை. இதனால், கோடைக்கால விடுமுறை முடிந்து, வரும் ஜூனில் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us