/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேலம் நெடுஞ்சாலையில் தடுப்புகள் வைக்க கோரிக்கை
/
சேலம் நெடுஞ்சாலையில் தடுப்புகள் வைக்க கோரிக்கை
ADDED : மார் 25, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
- சேலம் நெடுஞ்சாலையில் பல்வேறு கிராமப்பகுதிகளை இணைக்கும்
சாலைகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் வேகத்தடைகள்
அமைக்கப்படவில்லை. மேலும், சாலையோரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள்
உள்ளன. அதற்கு முன் தடுப்புகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில்
வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரிவதில்லை.
இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, கரூர் -- சேலம்
சாலையில் புகழூர் பிரிவில், பல விபத்துகள் நடந்துள்ளன. பலர்
காயமடைந்துள்ளனர். இதனால், தடுப்புகள் வைக்க நெடுஞ்சாலைத்
துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

