/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் தடை விதிக்க கோரிக்கை
/
பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் தடை விதிக்க கோரிக்கை
ADDED : செப் 21, 2024 02:54 AM
குளித்தலை: குளித்தலை நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்டில், அனைத்து அரசியல் கட்சியினரும் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடத்து-கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்ட் பகுதி மிகவும் குறுகிய இடவசதி-யாக உள்ளதால், பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லமுடி-யாத நிலை ஏற்படுகிறது. மேலும், இந்த பஸ்சை நம்பியுள்ள பொது மக்கள், ஏமாற்றமடைகின்றனர். மேலும், பல மாவட்டங்-களில் இருந்து பஸ்சில் வரும் பொது மக்கள், பஸ் ஸ்டாண்-டிற்குள் வராமல் மாற்று பாதையில் இறக்கி விடுவதால் பய-ணிகள் பாதிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இனிவரும் காலங்களில், பஸ் ஸ்டாண்டில் அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம் நடத்த நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.