/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடசேரி பெரிய குளத்தில் உள்ள விலங்குகளை பாதுகாக்க கோரிக்கை
/
வடசேரி பெரிய குளத்தில் உள்ள விலங்குகளை பாதுகாக்க கோரிக்கை
வடசேரி பெரிய குளத்தில் உள்ள விலங்குகளை பாதுகாக்க கோரிக்கை
வடசேரி பெரிய குளத்தில் உள்ள விலங்குகளை பாதுகாக்க கோரிக்கை
ADDED : மே 12, 2024 07:33 AM
குளித்தலை :கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வடசேரி பஞ்சாயத்தில், 350 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த மரங்கள் இருப்பதால், மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகளுக்கு உரிய முறையில் உணவு, தண்ணீர் வசதி இல்லாததால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்து கொடுக்க, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இவர்களின் அலட்சிய போக்கால், இரை தேடி ஊருக்குள் புகும் மான்கள், நாய்கள் கடித்தும், சமூக விரோதிகள் வேட்டையாடியும், வன விலங்குகளை அழித்து வருகின்றனர்.
எனவே, பெரிய குளத்தில் வாழ்ந்து வரும் வன விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.