/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வார்டுதோறும் விளையாட்டு மைதானம் ஜனநாயக வாலிபர் சங்கம் தீர்மானம்
/
வார்டுதோறும் விளையாட்டு மைதானம் ஜனநாயக வாலிபர் சங்கம் தீர்மானம்
வார்டுதோறும் விளையாட்டு மைதானம் ஜனநாயக வாலிபர் சங்கம் தீர்மானம்
வார்டுதோறும் விளையாட்டு மைதானம் ஜனநாயக வாலிபர் சங்கம் தீர்மானம்
ADDED : ஆக 11, 2025 05:36 AM
கரூர்: கரூர், அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 13வது மாநாடு நடந்தது. இதில், மாவட்ட தலைவர் சதீஸ் தலைமை வகித்தார். பொதுமக்கள், வாகன ஓட்டி-களுக்கு இடையூறாக உள்ள தான்தோன்றிமலை டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் நகராட்சி பகுதிகளில் வார்டு தோறும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்ப-யிற்சி கூடம் அமைக்க வேண்டும். வறட்சியான பகுதியை விவசாய பூமியாக மாற்றிடவும், பொதுமக்களுக்கு குடிநீர் தேவைகளை நிறை-வேற்றிடவும் காவிரியில் செல்லும் உபரி நீரை பஞ்சப்பட்டி, கோவக்குளம், வீரராக்கியம் உள்-ளிட்ட அனைத்து ஏரி, குளங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாவட்டம் மருதுார், திருச்சி மாவட்டம் உமையாள்புரம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்-றப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட புதிய தலைவ-ராக சதீஸ், செயலாளராக சிவக்குமார், பொருளா-ளராக ரஞ்சிதா, துணை தலைவராக ராஜேந்திர பிரசாத், துணை செயலாளராக தயாநிதி உட்பட, 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்-பட்டனர்.
மாநாட்டில், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜூன், தமிழ்-நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய-லாளர் பொன் ஜெயராம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சசிகலா உள்பட பலர்
பங்கேற்றனர்.