ADDED : நவ 17, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
கரூர்; கரூர் மாவட்ட, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், தலைமை தபால் நிலையம் முன், மாநகர செயலாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், அரிசி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், கள்ளக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாநகர பொருளாளர் அன்பு செல்வன், சி.ஐ.டி.யு., செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
