/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 17, 2024 01:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட இணை செயலாளர் சங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், விலைவாசி உயர்வை தடுத்து, பொது வினியோக முறையை வலுப்படுத்த வேண்டும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை ஊதியம் திருத்தம் அமல்படுத்த வேண்டும், தேசிய கல்வி திட்டத்தை கைவிட வேண்டும்,
பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், இணை செயலாளர் இளங்கோ, பொருளாளர் சுப்பிரமணி உள்பட, பலர் பங்கேற்றனர்.