/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
/
மின் ஊழியர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 19, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில், மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், துணை மின் நிலையங்களில் எஸ்.இ., இ.இ., ஏ.இ.இ., ஆகிய பதவிகளை ரத்து செய்யக்கோரியும், கணக்கீட்டு பிரிவில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மொபைல் டேட்டாவுக்கு மாதம், 500 ரூபாய் வழங்க வேண்டும், கணக்கீட்டாள ருக்கு விருப்ப மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், பொறியாளர் அமைப்பு மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், திட்ட செயலாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.