/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 01:42 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் கிளை-1 சார்பில், நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன், கிளை செயலாளர் ஜமுனா ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொகு ப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், அவுட்சோர்சிங் மற்றும் கான்ட்ராக்டர் முறையில் பணியாற்றி வருகின்றனர். அதை ரத்து செய்து விட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய துணைத்தலைவர் தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.