/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வி.சி.க., தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
/
வி.சி.க., தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
வி.சி.க., தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
வி.சி.க., தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2025 12:48 AM
கரூர்;கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் சுடர் வளவன் தலைமையில், லைட்ஹவுஸ் கார்னர் அருகே, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அரசை கண்டித்தும், அமெரிக்கா நாட்டின் தயாரிப்பான கோக்கோ கோலோ குளிர்பானத்தை கீழே கொட்டியும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், கரூர் மேற்கு மாவட்ட செயலர் புகழேந்தி, பொருளாளர் சதீஷ், எம்.பி., தொகுதி செயலர் துரை செந்தில், பொறியாளர் அணி துணை செயலர் செந்தில் குமார், நகர செயலர் முரளி, வழக்கறிஞர்கள் ஜெயராமன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.