/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து மேலாளர்களை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: அமைதி பேச்சு வார்த்தையில் தீர்வு

ADDED : மே 26, 2024 07:12 AM
குளித்தலை : குளித்தலை மக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், பொதுமக்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய, கரூர் அரசு போக்குவரத்துக் கழக மாவட்ட பொது மேலாளர் மற்றும் குளித்தலை அரசு பணிமனை கிளை மேலாளர் ஆகியோர்களை, உடனடியாக இடமாற்றக்கோரி, நாளை, குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் சுரேஷ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், குளித்தலை புறநகர் பகுதிக்கு செல்லும் பஸ்களில், சரியான பஸ் வழித்தட பதாகைகள் பொருத்த வேண்டும். திருச்சியில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள், சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் பஸ்களில், ஒரு சில பஸ்களை குளித்தலை வழியாக செல்ல வலியுறுத்த வேண்டும். கோயம்புத்துார் மற்றும் திருச்சியில் இருந்து குளித்தலைக்கு வரும் பஸ்களில், குளித்தலைக்கு பயணம் செய்யும் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரப்படும் என, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, மக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர்.