/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'உயர்நீதிமன்றம் அனுமதி பெற்று கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'
/
'உயர்நீதிமன்றம் அனுமதி பெற்று கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'
'உயர்நீதிமன்றம் அனுமதி பெற்று கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'
'உயர்நீதிமன்றம் அனுமதி பெற்று கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'
ADDED : பிப் 01, 2024 12:14 PM
கரூர்: ''உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று, கரூரில் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை புகார் மனு அளித்த, முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை பல்லாவரம், தி.மு.க.,- எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் வீட்டில், பட்டியல் இனத்தை சேர்ந்த சிறுமியை கொடுமைபடுத்தியதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்த, அ.தி.மு.க., பொதுச்செயலாளர்
பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நாளை (இன்று) கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த, அனுமதி கேட்டு கரூர் டவுன் போலீசுக்கு கடிதம் கொடுத்து விட்டோம்.
முதலில், ஆர்ப்பாட்டம் நடத்த வாய்மொழி அனுமதி கொடுத்த போலீசார், இன்று மாலை அனுமதி இல்லை என கடிதம் கொடுத்துள்ளனர். இதை வன்மையான கண்டிக்கிறோம். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நாளை (இன்று) நடக்க உள்ள நிலையில், கரூரில் மட்டும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதுகுறித்து, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உரிய அனுமதி பெற்று வேறு ஒரு நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கும் போலீசார், அ.தி.மு.க., வுக்கு மட்டும் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துகுமார், வக்கீல் அணி செயலாளர் சுப்பிரமணியன், மாநகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.