தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி வட்டார பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

க.பரமத்தி வட்டார பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

க.பரமத்தி வட்டார பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்


ADDED : ஆக 19, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:க.பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு முகாம்கள் நடந்தன.

அந்தந்த பகுதிகளில் நடந்த முகாம்களுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் கதிர்வேல் தலைமையில் தனி தனி குழுக்களாக சென்று மாணவ, மாணவியருக்கு டெங்கு காய்ச்சல், அதன் அறிகுறி

கள், கொசு பெருக்கத்தைத் தடுக்கும் முறைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் துாய்மையாக வைப்பதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தனர். சரியான முறையில் கை கழுவுதல், உணவு கையாளும் முறைகள் தனிநபர் சுகாதாரம், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

டெங்கு தடுப்பு மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us