/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துணை முதல்வர் உதயநிதிக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
/
துணை முதல்வர் உதயநிதிக்கு கரூரில் உற்சாக வரவேற்பு
ADDED : ஜூலை 10, 2025 01:14 AM
கரூர், கரூரில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி வந்தார். நேற்று காலை, அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். மாலை, 5:45 மணிக்கு கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் பங்கேற்க வந்த துணை முதல்வர் உதயநிதியை, பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானா, உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர் ரவுண்டானா உள்பட பல இடங்களில் தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி உடனிருந்தார்.
நிகழ்ச்சியில், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசு, ராஜா, தி.மு.க., கரூர் மாநகர பகுதி செயலாளர் கணேசன், சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கரன், வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.