/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துணை முதல்வர் பிறந்த நாள் போட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கல்
/
துணை முதல்வர் பிறந்த நாள் போட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கல்
துணை முதல்வர் பிறந்த நாள் போட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கல்
துணை முதல்வர் பிறந்த நாள் போட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கல்
ADDED : பிப் 17, 2025 02:46 AM
கரூர்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற, 1,404 பேருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்.
கரூர், பிரேம் மஹாலில், மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்-டன.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமை வகித்து பரிசு-களை வழங்கி பேசியதாவது:மாணவ, மாணவியர் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில், நான் முதல்வன், தமிழ் புதல்வன், புது-மைப்பெண், காலை உணவு உள்பட பல்வேறு திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். கடந்தாண்டு பட்-ஜெட்டில், பள்ளி கல்வித்துறைக்கு, 44,000 கோடி ரூபாய் ஒதுக்-கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு நமக்கு உரிய நிதியை வழங்க மறுத்து வருகிறது. இருந்தபோதும், நம் மாநி-லத்தில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் முதலீ-டுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்-கத்தை கொடுக்க கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த கபடி, கோகோ, கையுந்து பந்து, எறிபந்து, கூடைப்பந்து, தடகள விளை-யாட்டு போட்டிகளில், 6,500 பேர் பங்கேற்றனர். அதில், வெற்றி பெற்ற, 1,404 மாணவ, மாணவியருக்கு பரிசு, கோப்பை வழங்-கினார். மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், மாநகர பகுதி செயலாளர் குமார், ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.

