/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு
/
மரத்தில் கூடு கட்டிய கதண்டுகள் அழிப்பு
ADDED : நவ 07, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 50, விவசாயி. இவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள தென்னை மரத்தில், கதண்டுகள் கூடு கட்டி இருந்தன.
இது குறித்து, புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர்.

