ADDED : நவ 11, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் அடுத்த லட்சுமணம்பட்டி பகுதியில் பாம்பலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் செல்லும் வழியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலம் வழியாக மக்கள் வாகனங்களில் கோவிலுக்கு செல்கின்றனர். கடந்த மாதம் பெய்த மழையில், தரைப்பாலம் பல இடங்களில் சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது.தரைப்பாலம் மண் அரிப்பு காரணமாக மேடு, பள்ளமாக இருப்பதால் மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, தரைப்பாலத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.