ADDED : மார் 05, 2026 07:09 AM

குளித்தலை:குளித்தலை
அடுத்த பொய்யாமணி பஞ்., கோட்டையார் தோட்டத்தில், பெரம்பலுார்
எம்.பி., அருண்நேரு தன்னுடைய தொகுதி வளர்ச்சி நிதியில், 25 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள மேல்-நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
முன்னாள் மாவட்ட பஞ்., துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன் தலைமை
வகித்தார்.
இதேபோல் இரணியமங்கலம் பஞ்.,ல், 5 லட்சத்து 60 ஆயிரம்
மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தனம் அரசு நிதி உதவி பெறும்
பள்ளியில், 3 லட்சம் மதிப்பில் இருக்கையுடன் கூடிய பெஞ்ச்களை
வழங்கினார். திம்மம்பட்டி பஞ்., முதலிக-வுண்டனுாரில், 18 லட்சம்
ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டியை எம்.பி.,அருண்நேரு
தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள்
தியாகராஜன், சந்-திரன், கதிரவன், பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ.,
சரோஜினி, பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி, பள்ளி நிர்வாகி பிரபு மற்றும்
பலர் கலந்து கொண்டனர்.

