கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்
கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்
ADDED : மார் 16, 2026 07:52 AM
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கரூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
இதில், ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்., தன்னாசி கவுண்டனுாரில் சமுதாயக்கூடம், நாடகமேடை, மண்மங்கலம் பஞ்., மேற்கூரில் நொய்யல் வாய்க்காலுக்கு கல்வெட்டு அமைத்தல், புஞ்சை கடம்பங்குறிச்சி பஞ்., பண்டுதகாரன் புதுாரில் சிமென்ட் சாலை, பள்ளதோட்டத்தில் சிமென்ட் சாலை, சின்னவரப்பாளையத்தில் சமுதாய கூடத்திற்கு செட், கடம்பங்குறிச்சியில் சிமென்ட் சாலை, நன்னியூர் பஞ்., என்.புதுாரில் சிமென்ட் சாலை, சிறு பாலம், செவந்திபாளையத்தில் சிமென்ட் சாலை, சாந்தான்களத்தில் சமுதாயகூடம், பள்ளக்கோரையில் சிமென்ட் சாலை, வாங்கல் குப்பிச்சிபாளையம் பஞ்., நல்லகுமரன் பாளையம்,கோட்டைமேட்டில் சிமென்ட் சாலை, ராஜராஜன் நகரில் கழிவுநீர் வடிகால், நெரூர் வடபாகம் பஞ்., முனியப்பனுாரில் சிமென்ட் சாலை, சமுதாயக்கூடம், பெரியகாளிபாளையத்தில் சிமென்ட் சாலை, நெரூரில் சுகாதார வளாக பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நேருஜி நகர் ஆழ்குழாய் கிணறு, அன்பு நகர் மற்றும் பேங்க் குடியிருப்பு, பரணி நகர், பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் வடிகால், காமராஜ் நகர் நடுவீதியில் சிமென்ட் சாலை, குஞ்சப்பா நகர், செல்லப்பா நகரில் கழிவுநீர் கால்வாய் என்ற, 5.08 கோடியில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையை, கரூர் எம்.எல்.ஏ.,செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
