தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரூ.3.76 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணி தொடங்கி வைப்பு

ரூ.3.76 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணி தொடங்கி வைப்பு

ரூ.3.76 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணி தொடங்கி வைப்பு


ADDED : பிப் 18, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையும் நடந்தது.

முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி இப்பணிகளை தொடங்கி வைத்தார். கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்துார் பூலாம்பாளையம் ஊராட்சியில், செல்லரபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் நாடக மேடை அமைக்கும் பணி, கள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்

பள்ளியில், 7.64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் பணி, தன்னாசி கவுண்டனுார் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், 20 லட்சம் ரூபாயில் சமுதாய கூடம் அமைக்கும் பணி.

மேலும் மாங்காசோளிபாளையத்தில், 22 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம், சின்ன வடுகப்பட்டியில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் அமைக்கும் பணி, பெரிய வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆர்.சி.சி கட்டடம், 4.47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் பணி, மின்னாம் பள்ளியில், 35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்

கூடம் அமைக்கும் பணி. புதுவன்னியம்மன் கோவில் அருகில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி ஆகியவற்றை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

மேலும், நெரூர் தெற்கு ஆர்.சி தெருவில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் அமைக்கும் பணி, வேடிச்சிபாளையம் காட்டு

தெரு பகுதியில், 24.55 லட்சம் ரூபாயில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி, அரசு காலனியில், 20 லட்சம் ரூபாயில் புதிய அங்கன்வாடி அமைக்கும் பணிகளை திறந்து வைத்தார். மொத்தம், 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்தும், கரூர் எம்.எல்.ஏ.,செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us