ADDED : மே 09, 2025 02:00 AM
குளித்தலை, மே 9
குளித்தலை அடுத்த, பண்ணப்பட்டி மற்றும் தென்னிலையில், முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கடவூர் யூனியன் ஆணையர்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பங்கேற்று, பண்ணப்பட்டி பஞ்., உடையாட்டியில், 15வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ், மூன்று லட்சத்து, 45 ஆயிரம் மதிப்பில் நடந்து முடிந்த சிறிய சமுதாய சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.
இதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், சுக்காம்பட்டி 3வது தெருவில், ரூ. 9.21 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், கோவில்பட்டியில், தலா ரூ.17 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் சமத்துவ மயானம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டடம், உடையாபட்டியில், ரூ. 9.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்தல் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதேபோல், தென்னிலை பஞ்., மஞ்சபுளிப்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பில் புதிய நாடகமேடை அரங்கத்தை திறந்து வைத்தார்.
தி.மு.க., நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.